தமிழகம் முழுவதிலும் வருகின்ற 23ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் அரசு பொது சுகாதார மருத்துவ மனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிமோனியா தடுப்பூசி இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு மாதம், மூன்று மாதம் மட்டும் 9 மாதங்களில் மூன்று தவணையாக இந்த தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது. இந்த தடுப்பூசியை பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories