தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். சினிமா மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் இவர் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே குஷ்புவின் மூத்த சகோதரர் உடல் நிலை சற்று மோசமான நிலையில் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் குஷ்புவின் மூத்த சகோதரர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். கடந்த நான்கு நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தனது சகோதரர் ஆத்மா சாந்தியடையஅனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என குஷ்பூ கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் குஷ்புவின் சகோதரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
As much as you want your loved ones to be with you forever,time comes to say goodbye. My brother's journey has ended today. His love & guidance will always be us. I thank everyone who have prayed for him. As they say,the journey of life is decided by God. Rest in peace #Bhaijaan. pic.twitter.com/Ryh0AsaZRC
— KhushbuSundar (@khushsundar) December 17, 2022