தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்த சூழலில் தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையினை பொருத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிள்ளைகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.