தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.