நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்த கூட்டதொடர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக முடங்கியுள்ளன. ராகுல்காந்தி உள்ளிட்டோரின் போன் ஒட்டு கேட்பது தொடர்பாக விளக்கம் கேட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரையும், மாநிலங்களவை நண்பகல் 12 வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.