Categories
தேசிய செய்திகள்

JUST IN: நாடு முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை… அதிரடி உத்தரவு….!!!

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே இருந்ததால், பெரும்பாலான சேவைகள் தடைப்பட்டன.

அதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப் பட்டு வந்தது. இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் அவகாசத்தை வருகின்ற ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், பர்மிட் போன்ற மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |