நாட்டில் மக்கள் தங்களுக்கு தெரிந்த களப்பணியில் சிறப்பாக செயல்படுபவர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். களப்பணிகளில் சிறப்பான செயல்களை செய்யும் பலர் இந்தியாவில் உள்ளனர். கொரோனா பேரிடர் காலத்தில் அவர்கள் பணி இன்றியமையாதது. ஆனால் அவர்களைக் குறித்து நாம் அறிவதில்லை. அவர்களை சிறப்பிக்கும் வகையில் பத்ம விருது அவருக்கு வழங்கப்படுகிறது. மக்கள் அப்படிப்பட்ட நபர்களை தெரிந்தால் https://Padmaawards.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பரிந்துரைக்கலாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Categories