நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும், தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை சீனிவாசன் அவரிடம் வழங்கினார். அதன்படி இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தோனியின் ரசிகராக இங்கு வந்துள்ளேன்; எனது தந்தை கருணாநிதியும் தோனியின் ரசிகர் தான் என பேசியுள்ளார்.