வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. ஏற்கனவே 16 மாவட்டங்களில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனால் திருப்பத்தூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக இன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் மற்றும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.