Categories
மாநில செய்திகள்

Just In: நிவர், புரெவியை அடுத்து புதிய புயல் – மீண்டும் அலர்ட்…!!

தெற்கு அந்தமான் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புரெவி புயலாக நேற்று வலுப்பெற்றது. இந்நிலையில் இந்த புரெவி புயல் இலங்கை அருகே திரிகோணமலையில் கரையை கடந்தது. மேலும் நாளை இந்த புயல் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. நிவர் புயல் ஏற்கனவே கரையை கடந்த நிலையில் புரெவி தற்போது பாம்பனை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது. இது எந்த திசை நோக்கி செல்லும் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |