விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமத்தில் கருப்புசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு வெடி மருந்து உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி ஆலை உரிமையாளர் கருப்பசாமி, ஊழியர் செந்தில்குமார் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். மற்ற 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்கின்றனர்.