துருக்கியின் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். துருக்கியின் வடக்கில் பார்டின் நகருக்கு அருகே இந்த சுரங்கம் அமைந்துள்ளது. சுரங்கப் பணியின் போது வைக்கப்பட்டு இருந்த ரசாயனத்துடன் மீத்தேன் வாயு கலந்ததால் வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 300 அடி ஆழத்தில் நடந்த இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில் 48 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Categories