வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்ட நிலையில் பருவ மழையை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பருவ மழையை எதிர் கொள்வது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர் தலைமையில் நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது