Categories
தேசிய செய்திகள்

JUST IN: பள்ளிகள் திறப்பு… புதுச்சேரி அரசு அதிரடி முடிவு…!!!

புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குழந்தைகளின் எதிர் காலத்தை முன்னிட்டு விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆகஸ்ட் 15க்கு பிறகு ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டே பிறகு பள்ளி, கல்லூரிகள் தொடங்குவது தொடர்பாக ஆளுநர் மற்றும் முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் பள்ளி கல்லூரிகளை திறக்கும் திட்டம் இல்லை. முழுமையாக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய பிறகே பள்ளிகள் தொடங்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனங்களுக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்துள்ளதாவது: கொரோனா 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று கூறப்படுகின்றது. அதனால் பள்ளிகளை திறக்க வேண்டாம் என மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் குழந்தைகளின் எதிர் காலத்தை முன்னிட்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் விரைவில் பள்ளிகளை திறக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

Categories

Tech |