Categories
தேசிய செய்திகள்

JUST IN: பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. புதிய அதிரடி உத்தரவு….!!!!!

புதுச்சேரியில் நேற்று பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  பள்ளிகள் திறக்கப்படாது என்றும், கொரோனா குறைந்து ஏதுவான சூழல் வந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். புதுச்சேரியில் நேற்று  9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள்,பெற்றோர் மற்றும் அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று மாணவர்களின் நலனைக் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு மறு உத்தரவு வரும்வரை கிடையாது என அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து தேதியோ, மாதமோ குறிப்பிட முடியாது. நிலைமை முழுவதும் கட்டுக்குள் வந்த பிறகே பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |