Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

Just In: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்ததால், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். குமரியில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் இயங்காது. இன்று விடுமுறைக்கு ஈடாக ஏப்ரல் 24, சனிக்கிழமை வேலை நாளாக இயங்கும் என அறிவித்துள்ளார்.

Categories

Tech |