Categories
மாநில செய்திகள்

Just In: பள்ளி மாணவர்களுக்கு – அரசு முக்கிய அறிவிப்பு…!!

10,12 வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று அசல் சான்றிதழ் வழங்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வுகள் மட்டும் தகுந்த சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி  நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது செப்டம்பர், அக்டோபரில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று அசல் சான்றிதழ் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வு எழுதிய மையங்களில் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் மறுகூட்டல்  / மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய மதிப்பெண் சான்றிதழ் பின்னர் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |