12ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவர்கள் வருகின்ற 5ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதனையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் வகுப்புகள் நடத்தப்படாமல் குறுகியகால வகுப்புகளை கொண்டு மாணவர்கள் தேர்வு எழுத தயாராகி கொண்டிருப்பதால் மாணவர்களுக்கு மனதில் தேர்வு குறித்த அச்சம் உண்டாகியுள்ளது.
இந்நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவர்கள், வருகின்ற 5ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தனி தேர்வாக எழுத விரும்பும் மாணவர்கள் வருகின்ற 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.