Categories
மாநில செய்திகள்

JUST IN: பள்ளி மாணவி தற்கொலை….. சைபர் கிரைம் ஏடிஎஸ்பி ஆசிரியர்களிடம் விசாரணை….!!!!

கரூர் வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற விட்டு மாலை வீடு திரும்பிய மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு மாணவியின் வீட்டில் சோதனையிட்டபோது மாணவி எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில், பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசிப் பொண்ணு நானாதா இருக்கணும் என எழுதிய கையெழுத்திட்டுள்ளார். இதனை ஆதாரமாக வைத்துக்கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் மட்டும் நிர்வாகத்தினரிடம் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |