தமிழகத்தில் பிஜேபி ஆட்சி செய்வதை அனுமதிக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலின் ஈடுபடுகிறது. இதற்காக ராகுல் காந்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் நடத்தி வருகிறார். சென்னை அடையாறில் நடைபெற்று வரும்
காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர்” மோடி ,அமித்ஷா கால்களில் எடப்பாடி பழனிசாமி விடுவதா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அனைத்து மொழிகளும் சேர்ந்ததுதான் இந்தியா. தமிழகத்தை டெல்லியில் இருப்பவர்கள் ஆட்சி செய்வதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.