பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலமாக அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் செல் போன்கள் ஒட்டுக் கேட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது .ஆனால் இது தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் விரிவான பதில் மனு அளிக்க மத்திய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.
அதனைதொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி என் வீரமணி, நீதிபதிகள் சூரியகாந்த், ஹீமா ஹோலி ஆகியோர் அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு வந்தது. அவர்கள் மத்திய அரசு இது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் கூறி இருந்தனர். ஆனால் மத்திய அரசு இது தொடர்பான எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. இதனால் இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் செல் போன்கள் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது.