Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: பெகாசஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்திலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பெகாசஸ் மென்பொருள் தொடர்பான வழக்கில் நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், மற்றவர்கள் யாரும் இதுவரை ஏன் எந்த புகாரும் அளிக்கவில்லை? என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |