Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: பெண் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு…. இருவர் கைது…!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தரமற்ற உணவுப் பொருட்கள் கடைகளில் விற்கப்படுவதால் அதை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு மட்டுமில்லாமல் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

எனவே இதனை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அவ்வப்போது உணவகங்களில் ஆய்வு நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் பூந்தமல்லி அருகே தனியார் ஆலையில் பெண் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய சமையல் மேற்பார்வையாளர் பிபின், கவியரசர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |