2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்ளும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்திற்கு செல்கிறார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் அடிமட்டத்தில் உள்ள பெண்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கமாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று பகல் ஒரு மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1000 கோடியை பரிவர்த்தனை செய்ய உள்ளார். மேலும் ஒரு கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு ஊட்டச்சத்து தயாரிக்கும் துணை அமைப்புகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.