இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் முக கவசம் அணிவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே சமீபத்தில் சீனாவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த தாய் மகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவில் இருந்து தமிழக வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு பரிசோதனை செய்ததில் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே மதுரை வந்த இரண்டு பேருக்கும், சென்னையில் இரண்டு பேருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் தற்போது ஐந்தாவதாக இவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.