தமிழகத்தில் திமுக தலைமையிலான முதல்வர் ஸ்டாலின் அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தவும், பராமரிப்பை செம்மைப்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம், சத்தியவேல் முருகனார், தேச மங்கையர்க்கரசி உட்பட 17 பேர் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.குழுவின் துணை தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.