மேற்கு வங்கத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த ரவுடிகள் வாக்குப்பதிவுக்கு இடையூறாக இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. இதனை அடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்தி கிராமத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த ரவுடிகள் வாக்குப்பதிவுக்கு இடையூறாக இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் துணை ராணுவ படையினர் உள்ளூர் மக்களை வாக்களிப்பதற்கு அனுமதிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளார்.