Categories
தேசிய செய்திகள்

JUST IN : “லதா மங்கேஷ்கர் மறைவு”…. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்….!!!!

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், “சகோதரி லதாவின் பாடல்கள் பல உணர்வுகளை வெளிப்படுத்தியவை. பல தசாப்தங்களாக இந்திய திரைப்பட உலகின் மாற்றங்களை அவர் நெருக்கமாக கண்டார். லதா மங்கேஷ்கர் உடனான உரையாடல்கள் மறக்க முடியாதவை. அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Categories

Tech |