Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: வாக்கு எண்ணும் மையத்திற்குள் புகுந்த லாரி…. திருச்சியில் பரபரப்பு…!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். பின்னர் வாக்குபதிவு முடிந்ததையடுத்து வாக்குபதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது .இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அனுமதி இன்றி எல்இடி டிவி கிளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வாக்குபதிவு எண்ணும் மையத்திற்கு வந்து உள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பகுதியில் அனுமதி வழங்காத நிலையில் லாரி புகுந்துள்ளதால் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |