வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் சில தினங்களாகவே அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 5 முறை அந்த பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நில அதிர்வு ஏற்பட காரணம் என்ன? என்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். மேலும் இந்த நில அதிர்வினால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வேலூரில் ஏற்பட்ட நில அதிர்வில் கட்டடம் வலுவாக இல்லாததால் 40 வீடுகள் வரை சேதம் அடைந்துள்ளன. எனவே இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான வீடுகள் கட்டித்தரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.