Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: வைகை ஆற்றில் கம்பீரமாக எழுந்தருளினார் கள்ளழகர்….!!!!

கொரோனா குறைவால் இரண்டு வருடங்களுக்கு பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடந்தது. ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினால் மும்மாரி பெய்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களுடைய நம்பிக்கை. இந்த நிலையில் இன்று கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்.

முன்னதாக அழகர் மலையிலிருந்து புறப்பட்ட கள்ளழகர் வழிநெடுக சுமார் 450 மண்டகப்படிகளில் எழுந்தருளி னார். வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் இந்த நிகழ்வை கண்டு களித்தார்கள். மேலும் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |