கணவனுக்கு கீழ்ப்படியும் மனைவியே சிறந்தவள். கணவனுக்கு மனைவி கீழ்படியாததே குழந்தைகள் ஒழுக்கமற்று வளர்வதற்கான காரணம். குடும்பம் மற்றும் சமூகத்தில் நிலவும் பல வகையான பிரச்சினைகளுக்கு பெண் விடுதலையை காரணம் என்று சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட பிற்போக்கான ‘புரிதல் பத்தி’ கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. இது போன்ற கேள்விகளால் சமூக விடுதலையை நோக்கி நகரும் மாணவர்கள், மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 10ம் வகுப்பு முதல் பருவ பொதுத்தேர்வு ஆங்கில பாட வினாத்தாளில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்விகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.