பள்ளிக்கல்வித்துறை வழியில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் பணிபுரியும் 37 அலுவலர்களை மாற்றம் செய்து பள்ளி கல்வித் துறை நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில்
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா ராணிப்பேட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மார்ஸ்-ஐ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கே.ரோஸ் நிர்மலா செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த எஸ்.அருள்செல்வம் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.