தெற்கு வங்கக்கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 28ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
நேற்று தமிழக்தின் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. திருச்செந்தூரில் 18 செ.மீ மழை பதிவானது. மீண்டும் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்பதனால் இன்று திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.