தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. அதுமட்டுமின்றி ஒருசில பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது. இதற்கிடையில் டிசம்பர்-1 வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் பல பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்தவகையில் கடலூரில் 8 மணி நேரமாக தொடரும் மழையின் காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது.