அசாம் மாநிலத்தில் நகான் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 18 யானைகள் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம், நகான் மாவட்டத்தில் மலைப்பகுதியில் யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் பமுனி மலை அடிவாரத்தில் நான்கு யானைகள் உயிரிழந்து கிடப்பதாகவும், மற்ற யானைகள் மலைக்கு மேற்குப் புறத்தில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைகள் எப்படி இருந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் யானைகள் மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. எனினும் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே யானைகள் எவ்வாறு உயிரிழந்தது என்பதற்கான முழு காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்..