Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

JUST IN:7 பைக்குகளை தீ வைப்பு – பரபரப்பு…!!!

பெரம்பலூர் அருகே அருகாம்பூர் பெரிய ஏரியைச் சேர்ந்த குத்தகைதாரருக்கும் கிராம மக்களுக்கும் மோதல் உருவாகியுள்ளது. இதையடுத்து குத்தகைதாரருக்கு  போட்டியாக கிராம மக்கள் ஏரியில் இறங்கி வளர்ப்பு மீன்களை சூறையாடி உள்ளனர். இதன் காரணமாக நடந்த மோதலில் 7 பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலை தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் தற்போது காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |