அம்மா ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது கூறியது போன்றே தற்போது சசிகலாவுக்கு கூறுவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலையாக உள்ள நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா மற்றும் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் சசிகலா சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு டி.டி.வி தினகரன் வருகை தந்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சசிகலா நலமாக இருப்பதாகவும், அவர் குறித்து பயப்பட தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சசிகலா விடுதலை ஆக இன்னும் சில தினங்களே இருப்பதால் சசிகலா மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்ற நிலையில் சென்னைக்கு அழைத்து வர அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அம்மா ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்தபோது “அம்மா காலையில் இட்லி சாப்பிட்டார், நடைபயணம் மேற்கொண்டார்” என்று மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். தற்போது அதே போன்று சசிகலாவுக்கும் மருத்துவர்கள் தெரிவித்து வருவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.