Categories
தேசிய செய்திகள்

இப்படி ஆகிட்டே…! ”ரொம்ப வேதனையில் இருக்கின்றேன்” பிரதமர் மோடி ட்விட் …..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது ரயில் மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்திலிருந்து மத்திய பிரதேசம் நோக்கி சென்ற தொழிலாளர்கள் இரவில் தண்டவாளத்தில் ரயில் வாராது என்று தூங்கி கொண்டு இருந்தனர். தொழிலாளர்கள் அசந்து தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் சரக்கு ரயில் வந்து அவர்கள் மீது மோதியதில் 17 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவ நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயலிடம் பேசினேன். அவர் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |