மனதில் நினைக்கும் சொற்களை ஸ்கிரீனில் டைப் செய்யும் திறன் கொண்ட கருவியை உருவாக்க பேஸ்புக் நிறுவனம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்பொழுது மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் மிஞ்சும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றனர். அதிலும் அதீத தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஃபேஸ்புக் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதற்கு முன்பாக கூகுள் நிறுவனம் பேசுவதன் மூலம் ஸ்கிரீனில் டைப் செய்யும் வசதியை ஏற்படுத்தி தந்தது. அதன்படி விரல்களால் டைப் செய்து நேரம் செலவிடுவதை விட எளிதாக பேசி டைப் செய்து கொள்ளலாம் என்பதால் அது உலக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தற்பொழுது இதற்கு போட்டியாக மனதில் நினைப்பதை தட்டச்சு செய்யும் திறன் உடைய கருவியை உருவாக்க முகநூல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மூளை செயல்பாட்டை பேச்சாக புரிந்துகொள்ளும் இயந்திர algorithmகளை உருவாக்கும் ஆய்வுக்கான நிதியுதவியையும் அந்நிறுவனம் அளித்துள்ளது. இந்நிலையில் நிமிடத்திற்கு 100 சொற்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு கருவி ஒன்றை உருவாக்கி வருகின்றனர். இந்த கருவி வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டால் தொழில்நுட்பத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.