இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளத.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் உருவான கொரோனா உலக நாடுகள் முழுவதிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் எடுத்து தற்போது பாதிப்பின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில் பிரிட்டனில் இருந்து புதிதாக உருமாறிய கொரோனா இந்தியாவிற்கு வந்தவர்கள் மூலம் பரவியுள்ளது.
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த 53 பேருக்கு புதிய தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 13 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மேலும் யாரேனும் உருமாறிய கோரனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்களா என தொடர்ந்து பரிசோதனை நடந்து வருகிறது.