தமிழகத்தில் அதிமுக அணி கடந்த சில நாட்களாகவே சண்டை சச்சரவுகளுடன் சென்று கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பல அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அதிமுகவின் வரவு செலவு குறித்து இபிஎஸ் தாக்கல் செய்த கோப்பு Audited annual accounts FY 2021-22 தேர்தல் ஆணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கையெழுத்திட்டு இதை இபிஎஸ் தாக்கல் செய்திருக்கிறார். அதை தேர்தல் ஆணையம் ஏற்று உள்ளது. இதனால் இபிஎஸ் தலைமையிலான அணி தான் அதிமுக என தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக கூறப்படுகிறது. இது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.