திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உடலில் 6 குண்டுகள் பாய்ந்துள்ளன. அதிகாலையிலேயே துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்தை கேட்டு திண்டுக்கல் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிந்த திண்டுக்கல் சரக டிஜஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.