குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சித்தாண்டி , பூபதி ஆகிய இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
குரூப்-2 ஏ தேர்வில் கைதாகி இருக்கக்கூடிய காவலர்கள் சித்தாண்டி பூபதி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டிருக்கிறார். இரண்டு பேரும் சென்னை புதுப்பேட்டையில் இருக்க கூடிய ஆயுதப்படை காவலர்கள் ஆக பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். சித்தாண்டி 2006ஆம் ஆண்டிலிருந்து காவல்துறைப் பணியில் இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு இவர் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
இங்கு இருந்து கொண்டு தான் குரூப் 4 , குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல அங்கு பணியாற்றிய பூபதியும் , சித்தாண்டி இடைத்தரகராக செயல்பட்டு பலரிடம் பணம் வாங்கி கொண்டு அரசு பணிகளை வாங்கி கொடுத்திருக்கிறார். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் 2 பேரையும் பணியிடம் நீக்கம் செய்வதாக சென்னை காவல்துறை ஆணையர் AK விஸ்வநாதன் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார்.