திமுக MLA செந்தில் பாலாஜியை கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011 முதல் 2016 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார்.அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் பெயரைச் சொல்லியும் , அவரது நண்பர்களும் , உதவியாளர்களும் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 16 பேரிடம், சுமார் 95 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கி விட்டு பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்தாக சொல்லப்படுகின்றது.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அவரின் அலுவலகம் , வீடு என சோதனை நடத்திய நிலையில் எங்கே ? கைது செய்ய படுவோமா என்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த 31ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது அவரை போலீஸ் கைது செய்யக் கூடாது என்று தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தார்.