தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரச தலைவரை சந்தித்து CAA எதிர்ப்பு கையெழுத்து இயக்க பிரதிகளை வழங்கினர்.
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நாடுமுழுவதும் நடத்திவரும் நிலையில் தமிழகத்திலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு 2 கோடி மக்களிடம் பெற்ற கையெழுத்து படிவங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில்தான் தற்போது திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு தலைமையில் எதிர்க் கட்சித் தலைவர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரடியா சந்தித்து அந்த படிவங்களை ஒப்படைத்துள்ளனர்.
இந்த சந்திப்பில் டி ஆர் பாலு , கனிமொழி , திருச்சி சிவா , மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்புராயன் ஆகியோர் குடியரசுத் தலைவர் மாளிகை சென்று வாங்கினர். இந்த சந்திப்பு நிறைவடைந்த உடன் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு செய்தியாளர்களை சந்தித்து குடியரசுத் தலைவரிடம் வழங்கிய இரண்டு கோடி கையெழுத்து படிவங்கள் குறித்து பேட்டியளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.