டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.
குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் அந்த 39 பேர் தரவரிசையில் இருந்து நீக்கப்பட்டு , புதிதாக 39 பேர் பேரை இணைத்து 9881 பணியிடங்களுக்கான கலந்தாய்வு பிப். 19ஆம் தேதி தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்த நிலையில் தற்போது கலந்தாய்வு தொடங்கியது.