மதுரையில் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 மாதங்களுக்கு மேலாக மதுரையில் கொரோனா நோய்களின் தாக்கம் அதிகரித்து, தற்போது அரசின் நடவடிக்கையால் குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலின் வேகம் அதிகரித்து வைக்கிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரக்கூடிய சத்திய பிரியா என்பவருக்கு 7 வயதான திருமலேஷ் மற்றும் 9 வயதான மிருத் ஜெயன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இதில் 7வயதான திருமலேஷ் என்ற சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் திருமலேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனின் உடல் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சிறுவனின் சகோதரர் மிருத் ஜெயன் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.