தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளார். மேலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகஉருவான பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
இதுவரை தமிழகத்தில் பேச்சிப்பாறையில் 3 செ.மீ. ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் குமரிசித்தரில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.