கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதை அடுத்து கோழிக்கோட்டில் 20,000 கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொடியாத்தூர் , வேங்கேரி , சாத்தமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கோழி பண்ணைகளில் கடந்த ஒரு வாரமாக கோழிகள் தீடிரென இறந்து கொண்டே.இருந்தது இதையடுத்து உரிமையாளர்கள் கால்நடைத்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் கால்நடைதுறையின் சிறப்பு மருத்துவர்கள் கோழி பண்ணைகளுக்கு வந்து கோழிகளின் கொழுப்பு மாதிரிகளை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பினர்.
ஆய்வின் முடிவில் இது பறவை காய்ச்சல் என்று உறுதியாகிய நிலையில் அந்த மூன்று ஊராட்சிகளையும் சுற்றிஉள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள கோழிகள், முட்டை , இறைச்சி ஆகியவை நெகிழிப் பைகளில் கால்நடைத் துறையினரால் எடுக்கப்பட்டு , லாரிகளில் ஏற்றி ஊருக்கு வெளியே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி அவற்றையெல்லாம் அந்த குழிக்குள் போட்டு எரிக்கப்பட்டது.மேலும் மூன்று ஊராட்சிகளை சுற்றி இருக்கும் பகுதிகளில் கோழி முட்டை , இறைச்சிகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்து இருக்கிறார்கள்.